நண்பரால் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கதி!

379

அக்மீமன பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 17 வயது இளைஞன் காலி மாவட்டத்தின் போத்தல பொலிஸாரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

அச் சிறுமி பத்தேகம பகுதியைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட இளைஞனுடன் காதல் தொடர்பைக் கொண்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறான நிலையில் தான் வகுப்புக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிய சிறுமி, சந்தேக நபரான இளைஞனுடன் வீட்டை விட்டு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.

இதன்போது போத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் சந்தேக நபரான மாணவன் முச்சக்கர வண்டியில் வைத்து சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரான இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.