தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை

324

புதிய பதிவுகளுக்காக தேசிய எரிபொருள் அனுமதி அட்டையின் QR அமைப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது முதல் புதிய வாடிக்கையாளர்கள் பதிவு செய்ய முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளது.

புதிய வாடிக்கையாளர்கள் https://fuelpass.gov.lk என்ற இணைப்பை அழுத்தி தங்களது எரிபொருள் அனுமதி அட்டைக்கு பதிவு செய்ய முடிவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இது குறித்து விபரித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை பதிவு செய்யும் நடவடிக்கை திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக இரண்டு நாட்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக முன்னர் எரிசக்தி அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், மீண்டும் வாடிக்கையாளர்கள் தங்களது தேசிய எரிபொருள் அனுமதி அட்டையை பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.