இலங்கையில் மேலும் ஐவர் பலி!

74

இலங்கையில் மேலும் 5 கோவிட் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஐந்து பேரில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவர். உயிரிழந்த ஐந்து பேரும் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் பதிவான மொத்த கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,583 ஆகும்.

இதேவேளை, இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 666,580 ஆகும்.