பெட்ரோலிய இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

690

பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை மதிப்பீடு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு நேற்று நியமிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு எரிபொருள் இறக்குமதி மற்றும் சில்லறை சந்தைகளை திறக்க அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி, எரிசக்தி அமைச்சு முறையான நடைமுறையைப் பின்பற்றி தெரிவு செய்யப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொண்டு இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது.

பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் மதிப்பீடு நேற்று நியமிக்கப்பட்ட இந்தக் குழுவால் மேற்கொள்ளப்படும். அத்துடன், அமெரிக்க அபிவிருத்தி முகவர் நிலையத்தின் பிரதம பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்துள்ளனர்.

அந்த கூட்டத்தில், எரிசக்தி துறையின் தேவைகள், சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகன தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வள மேலாண்மை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் எரிசக்தி துறைக்கு அதிகபட்ச நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்ததாக எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.