யாழ் முதியவர் தொடர்பில் விடுக்கப்பட்ட உருக்கமான கோரிக்கை!

433

யாழில் கைவிடப்பட்ட நிலையில் நோய்வாய்ப்பட்டு இருந்த முதியவர் ஒருவர் கைதடி முதியோர் சமூக ஆர்வலர்கள் சிலரால் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குறித்த சமூக ஆர்வலர் ஒருவரது முகநூலில்,

கைவிடப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு யாழ் நகர் மத்தியில் முட்டாஸ் கடை சந்தியில் அருகாமையுள்ள கடைத்தெருவில் கடந்த இரண்டு நாட்களாக படுத்து இருந்தார்.

அவ்விடம் இன்று சென்று பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு , கிராசேவையாளர் ஊடாக கைதடி முதியோர் இல்லத்தில் குறித்த முதியவரை சேர்த்து இருக்கின்றேன்.

அந்த முதியவரின் பெயர் சிவராசா என்றும், அவர் பல காலமாக கோப்பாய் சரஸ்வதி விலாஸ் தேனீர் கடையில் வேலை செய்து இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

எனினும் அவர் குறித்து வேறு விபரம் எதுவும் அறிய முடியவில்லை என்றும், எனவே அந்த முதியவர் தொடர்பில் அவரின் குடும்பத்தினர் அறிந்துகொள்வதற்கு உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .