இறந்த தாயின் பிணத்தை மரப்பலகையில் கட்டி எடுத்து சென்ற மகன்கள்!

553

இறந்த தாயின் உடலை மரப்பலகையில் கட்டி இருசக்கர வாகனத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு அவரது மகன்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.

அனுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் நெஞ்சுவலி காரணமாக ஷஹதோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த தாயின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதியை மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இறந்த தாயினை மரப்பலகையில் கட்டி சுமந்து இரு மகன்களும் சென்றுள்ளனர்.