கியூ.ஆர் அட்டை தொடர்பில் வெளியாக முக்கிய அறிவிப்பு : அடுத்த 48 மணித்தியாலங்களில் முடக்கம்!

907

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டின் புதிய பதிவுகள் அடுத்த 48 மணித்தியாலங்களில் முடக்கப்படும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) அறிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக பதிவு செயல்முறை முடக்கப்பட உள்ளதாக ICTA தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போதுள்ள பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் கணினியைப் பயன்படுத்துவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெளிவுபடுத்தினார்.