யாழில் ஆட்டோவை ரிக்சாவாக மாற்றிய நபர்! நபரொருவரின் புதிய முயற்சி!!

219

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதேவேளை சில நாட்களாக எரிபொருள் பிரச்சனை ஒரு அளவிற்கு குறைந்து வருவதாக அவதானிக்க முடிகின்றது.

யாழில் கடந்த இரு வாரங்களாக எரிபொருள் விநியோகம் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான ஒரு நிலையில் யாழ்ப்பாண வீதியில் நபர் ஒருவர் தனது முச்சக்கரவண்டியை றிக் ஷா வண்டி போல் பயன்படுத்தி வீதியை சுற்றி வருகின்றனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் முகநூலில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகின்றது.