பாடசாலைகள் நடைபெறும் விதத்தில் மாற்றம் : வெளியானது புதிய நடைமுறை!

844

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் அடுத்த வார செயற்பாடுகள் தொடர்பான மாற்றத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய வாரத்தில் மூன்று நாட்கள் செயற்படும் பாடசாலைகள், வியாழக்கிழமைக்கு பதிலாக திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை போயா விடுமுறை என்பதனால் அடுத்த வாரம் பாடசாலைகள் இந்த அட்டவணையை பின்பற்றுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.