ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்ட ரயில் பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்தார்!

7

சனிக்கிழமை (23) அதிகாலையில் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டதாகக் கூறப்படும் மரணம் பதிவாகியுள்ளது.

ரயிலுக்குள் மது அருந்திக் கொண்டிருந்த சில பயணிகளை மற்ற பயணிகளின் முறைப்பாட்டையடுத்து, புகையிரதத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட பயணிகளை பெட்டியிலிருந்து அழைத்துச் செல்லும் நேரத்தில், சந்தேக நபர்களில் ஒருவர் பாதுகாப்பு அதிகாரியை உதைத்துள்ளார், அங்கு அவர் ஓடும் ரயிலில் இருந்து விழுந்தார்.

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வெயங்கொடையை அண்மித்துச் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, வெயங்கொட பொலிஸார், வதுராவ புகையிரத நிலையத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் கிடந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 52 வயதுடைய ஒருத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், சந்தேகநபர்கள் நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் மற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.