வவுனியா செட்டிகுளத்தில் புகையிரதத்தை மறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் : திரும்பிச்சென்ற புகையிரதம்!

20

வவுனியா செட்டிக்குளத்தில் உள்ள புகையிரத தண்டவாளத்தில் பொதுமக்கள் ரயிலை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புகையிரம் மதவாச்சிக்கு திரும்பிச்சென்றுள்ளது.

இச்சம்பவமானது நேற்று வவுனியா செட்டிகுளத்தில் புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த 04ம் திகதி அன்று நபர் ஒருவர் பாதுகாப்பற்ற புகையிரதத்தை கடக்கும் போது அனுராதபுரத்திலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த நபரை மோதித் தள்ளியது.

இதனால் இந்த பகுதியில் புகையிரத கடவை அமைத்து தருமாறு கோரியும் இதில் உத்தியோகத்தர் ஒருவரை கடமையில் இருத்த கோரியும் பொதுமக்கள் ஆர்ரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் விபத்து ஏற்பட்ட பாதுகாப்பு கடவைக்கு பேரணியாக சென்று அங்கு வந்த னுராதபுரத்திலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரத்தினை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் புகையிரம் மதவாச்சிக்கு திரும்பிச்சென்றுள்ளதையடுத்து போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.