யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு தந்தையும் மகளும் படுகாயம்!

10

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் தந்தையும் மகளும் பலத்த படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யாழ் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பெலி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் புகுந்த மது போதை நபர் மேற்கொண்ட தாக்குதலில் தந்தையும் மகளும் பலத்த காயமடைந்துள்ளனர்

இவ்வாறு பலத்த காயமடைந்தவர்கள் அவ்வீட்டில் வசித்து வரும் 52 வயதான தந்தையும், 18 வயதான மகளும் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் அயலவர்களால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தந்தை மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.