திருக்கோவில் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

6

அம்பாறை – பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலமானது நேற்று முன்தினம் 04 உமரைி கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் கோமாரி பிரதேசத்தைச் சேர்ந்த பெரியதம்பி சற்குணம் என்பவர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடலுக்கு தொழிலுக்கு செல்ல முற்பட்ட மீனவர்கள் கரையில் சடலம் இருப்தை பார்த்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசேதனைக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.