சுற்றாடல் விஞ்ஞான பரீட்சையில் தேர்ச்சி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

6

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்த பல்கலைக்கழகத்தில் எழுதிய சுற்றாடல் விஞ்ஞானம் தொடர்பான முதுமாணி பட்டப்படிப்புக்கான பரீட்சையில் இரண்டு பாடங்களில் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

இதற்கு அமைய Environmental Policy Planning And Assessment பரீட்சையில் A+ பெறுபேறும் Environmental Economics And Management பரீட்சையில் A-பெறுபேறும் பெற்றுள்ளார்.

அரசியல்வாதியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் போது சுற்றாடல் விஞ்ஞானத்தில் முதுமானி பட்டம் பெற்ற முதல் அரசியல் தலைவர் சஜித் பிரேமதாச என கருதப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் அழிவு காரணமாக உலகில் சுற்றாடல் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உலக தலைவர்கள் தற்போது சுற்றாடல் சம்பந்தமான துறை குறித்து கூடிய கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றனர்.