இயக்குநர் சிவாவுடன் கைக்கோர்க்கும் நடிகர் சூர்யா : வெளியான தகவல்!

4

இயக்குநர் சிவாவுடன் இணைந்து மாபெரும் படஜெட்டில் உருவாகவுள்ள திரைப்படத்தில் சூர்யா கதாணாயகனாக நடித்து வருவதாக தகவல் வௌயியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முனனர் இயக்குநர் சிவா கூட்டணியில் சூர்யா நடிக்கவில்லை என தகவல் பரவியுள்ளது.
அத்தகவல் முற்றுமுழுதாக பொய் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகி இருக்கிறார். ஏங்கு சென்றாலும் இவரின் திரைப்படங்கள் குறித்து தான் பேசப்பட்டு வருகிறது.

அதன்படி விக்ரம் திரைப்படத்தில் அவரின் ரொலக்ஸ் கதாபாத்திரம் செம வைரலானது, இதனால் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகத்தின் மீது இப்போது ரசிகர்கள் ஆர்வம் அதிகமாகியுள்ளது என்றே கூறலாம்.

மேலும் அவரின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அப்டேட்ஸும் வந்தபடி உள்ளன, அந்த வகையில் சூர்யா 41 திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக்காகி வரும் சூரரை போற்று திரைப்படத்திலும் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

பெரிய பொருட்செலவில் உருவாகும் அப்படத்தில் முக்கிய இசையமைப்பாளர் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.