வீட்டில் இருந்த வயோதிப பெண்ணின் சங்கிலியை அறுத்த நபர் தடுக்க முயன்ற பெண் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்!

6

கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை தாக்கி சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றய தினம் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த நபர் வீட்டிலிருந்த பெண்ணிடம் விலாசம் ஒன்றை காண்பித்து விசாரித்துள்ளார்.

பின்னர் வீட்டிலிருந்து வெளியேறுவதுபோல் சென்றுவிட்டு பின்னர் திரும்பி ஓடிவந்து பெண் அணிந்திருந்த 2 பவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளார்.

இதன்போது குறித்த வயோதிப பெண் சங்கிலியை அறுக்க விடாது தடுத்த நிலையில் பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.