மரத்தில் ஏரிய முதியவர் : தடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு

9

முல்லைத்தீவு – கணுக்கேணி கிழக்கு பகுதியில் மரத்திலிருந்து முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று (08) இடம்பெற்றுள்ளது.

கணுக்கேணி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.