மட்டக்களப்பில் காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் பலி

1

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமந்தியாற்றுப்பகுதியில் யானை தாக்கி விவசாயி ஒருவர் பலியான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

72 வதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான வெள்ளத்தம்பி குமரகுரு என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

நெற்செய்கை செய்து மாடு வளர்ப்பிலும் ஈடுபடும் குறித்த நபர் சம்பவ தினத்தன்று தனது வயலில் உள்ள வாடியில் காவலில் இருக்கும் போது யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே பலியானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார் சடலங்களை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.