தனது கர்ப்பிணி மனைவி அழகு இல்லை என ஆசிட் குடிக்க வைத்த கொடூர கணவன்

1084

தெலுங்கானா மாநிலத்தில் மனைவி அழகாக இல்லை என கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்ததால் கர்ப்பினி மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் நிஜாமாபாத் மண்டலம் மல்காபூர் தாண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் தருண்-கல்யாணி தம்பதி. கல்யாணி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், மனைவி அழகாக இல்லை எனவும் வரதட்சனை கேட்டும் தொடர்ந்து தருண் தொல்லை கொடுத்து வந்ததால், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனைவி கல்யாணிக்கு கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிட்டை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளார் ஈவு இரக்கமற்ற தருண். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கல்யாணி சிகிச்சை பலனியின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினா் தருண் அவருடைய தந்தை பக்கிரா மற்றும் சகோதரன் பிரவீன் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.