கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (28-04-2022) பகல் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
ஏ9 வீதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கெப் வாகனத்துடன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த உடுத்துரை வடக்கு தாளையடி பகுதியை சேர்ந்த நாகேந்திரன் ஜெகன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.