ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி –  350ஐ கடந்த டொலரின் பெறுமதி!!

291

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில்,

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்று 355 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாவின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.

நேற்று மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 333.88 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.