மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வதந்தி கிளப்பிய விசமிகள் !

49

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

எனினும் அவர் தொடர்ந்தும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

சுவாச பிரச்சினை காரணமாக நேற்று அதிதீவிர சிசிச்சை பிரிவில் மங்கள சமரவீர அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை தற்போது தேறிவருவதாகவும், பெரும்பாலும் நாளை அல்லது நாளை மறுதினம் சாதாரண நோயாளர் வார்ட் அறைக்கு மாற்றப்படுவார் என்றும் மங்கள சமரவீரவுக்கு நெருங்கிய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.