வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு!

65

கொழும்பு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த Dr. ராசிக் முகமட் ஜனுன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மான்குளத்தை சேர்ந்த Dr. ராசிக் முகமட் ஜனுன் மருத்துவர் ராகம வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.

இதேவேளை அவரின் மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.