நாடு முழு முடக்கம் தொடர்பாக கோட்டாபய வெளியிட்ட அதிரடி தகவல்!

75

நாட்டை மீண்டும் முழுமையாக முடக்குவதற்கு தனக்க எண்ணமில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை மருத்துவத்துறை நிபுணர்கள், சுகாதார அமைச்சருடன் விசேட கலந்துரையாடலை ஜனாதிபதி நடத்தியிருந்தபோது அவர் இதனை கூறியதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்பொழுது 60 வயதுக்கும் மேற்பட்ட மற்றும் தொற்றா நோயுள்ளவர்கள் கோவிட் தொற்றினால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்கும்படி ஜனாதிபதி பணித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.