இஷாலினியின் உடல் இன்று மீள் பரிசோதனை!

23

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழுபிலுள்ள இல்லத்தில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி இஷாலினியின் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று, கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு மிகுந்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்ட சிறுமியின் உடல் இன்று சனிக்கிழமை மீள் மரண விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணான தொழில்புரிந்த மலையகத்தின் டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்திருந்தார்.

விசாரணையில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து, ரிஷாட் பதியூதீனின் மனைவி உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீள் மரண விசாரணைக்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுமியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.