யாழில் வறிய குடும்பங்களில் இருக்கும் 1100 பேருக்கு உணவுப்பொதிகளை வழங்கிய இராணுவம்!

1

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு பொதிகளை இராணுவத்தினர் வழங்கியுள்ளனர்.

யாழ்.பருத்தித்துறையில் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் முடக்கப்பட்டிருக்கும் பகுதி மக்களுக்கு படையினர் மதிய உணவு பொதிகளை நேற்று வழங்கியிருக்கின்றனர்.

சுமார் 1100 மதிய உணவுப்பொதிகளை பருத்தித்துறை இராணுவமுகாம் மற்றும் கற்கோவளம் இராணுவமுகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் சுகாதார பிரிவினருடன் இணைந்து வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.