புலமைப்பரிசில்,உயர் தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

13

5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்குரிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் இதனை இன்று(19) தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

அத்துடன், கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.