Home இலங்கை செய்திகள் கொரோனாவினால் மரணித்த 605 பேரின் சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன!

கொரோனாவினால் மரணித்த 605 பேரின் சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன!

0

கொரோனா தொற்றினால் உயிரிழந்த, 605 பேரின் சரீரங்கள், இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் அசேல குணவர்தன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில் குறித்த சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


572 முஸ்லிம்களின் சரீரங்களும், 14 கிறிஸ்தவர்களின் சரீரங்களும், 12 இந்துக்களின் சரீரங்களும், 7 பௌத்தர்களின் சரீரங்களும் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.