வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளியை தூக்கிச்சென்ற நபர்!

0

நேற்றிரவு தீடீரென நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவரை அவரின் உறவினர்கள் அம்பாறை மத்திய முகாம் வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னர் சுகாதார பிரிவினரால் அவருக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதன்போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு தேவையான

நடவடிக்கைகள் வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

குறித்த சம்பவத்தை அருகில் இருந்த நபர் ஒருவர் அவரது கைப்பேசியில் பதிவு செய்திருந்தார். குறித்த நபர் நோயாளியான பெண்ணை கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையிலும் அவருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.