Home இலங்கை செய்திகள் 14ஆம் திகதியும் நடமாட்ட கட்டுப்பாட்டை நீக்க முடியாது!

14ஆம் திகதியும் நடமாட்ட கட்டுப்பாட்டை நீக்க முடியாது!

0

தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 14ம் திகதியும் நடமாட்டக் கட்டுப்பாட்டை நீக்க முடியாதென்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கின்ற போதும், மக்களது நடமாட்டத்தை கணிசமாக கட்டுப்படுத்த முடியாத நிலைமை நிலவுகின்றது.

அத்தோடு நடமாட்டக் கட்டுப்பாட்டின் மூலம் 90 சதவீதமான நடமாட்டத்தை கட்டுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் துரதிஸ்ட வசமாக அது சாத்தியமற்றுள்ளதாக காணப்படுகின்றது.Advertisement

மேலும் குறிப்பாக கொழும்பு நகரில் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அத்தியாவசிய துறையைப் போன்று இயக்கப்படுகின்றன.

அத்தோடு பணியாளர்கள் நாளாந்தம் தங்களது பணிகளுக்கு செல்வதால், கொழும்பு நகரம் தொடர்ந்தும் சனநடமாட்டம் உள்ள இடமாகவே இருக்கிறது.

மேலும் இவ்வாறானா சூழ்நிலையில், அடுத்தவாரமும் நடமாட்டத் தடையை நீக்க முடியாத நிலைமையே நிலவுகிறதென்று அவர் தெரிவித்துள்ளார்