வவுனியாவில் முகக்கவசம் சீராக அணியாதோருக்கு எதிராக வழக்கு!

49

பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் வவுனியா வர்த்தக நிலையங்களில் சீரான முறையில் முககவசம் அணியாது நின்றவர்களுக்கு எதிராக சுகாதார பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுபாடுகள் அத்தியாவசிய தேவைகளுக்காக இன்று காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியா நகரப் பகுதியில் பொருட் கொள்வனவுக்காக அதிளவிலான மக்கள் வருகை தந்த நிலையில் சுகாதார பரிசோதகர்களும், பொலிசாரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது வர்த்தக நிலையங்களில் முககவசம் அணியாது கடமையாற்றியவர்கள் மற்றும் முகக்கவசம் சீராக அணியாமல் கடமையாற்றியவர்கள் ஆகியோரை சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் இணைந்து கைது செய்து அழைத்துச் சென்றதுடன், அவர்களுக்கு எதிராக சுகாதாரப் பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பிசீஆர் பரிசோதனையும் முன்னெடுக்ப்பட்டது.

இவ்வாறு வவுனியா நகரம், ஹொரவப்பொத்தானை வீதி, புகையிரத வீதி, குருமன்காடு, மன்னார் வீதி, பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை உள் வட்ட வீதி, இலுப்பையடி ஆகிய பகுதிகளில்,

வர்த்தக நிலையங்களில் நின்ற சுமார் 50 பேர் வரையில் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுகததார வழிமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கும், வங்கிகளுக்கும் கடுமையான எச்சரிக்கைளும் இதன்போது விடுவிக்கப்பட்டன.