வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரே இரவில் 155 பேர் அனுமதி!

29

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைத்தியசாலைக்கு 155 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கட்டில் வசதிகளை கொண்ட வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் வவுனியாவில் பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 200 படுக்கை வசதிகள்கொண்ட வைத்தியசாலையாக மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு குறித்த வைத்தியசாலையில் 155 கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.