இரண்டு இளம் பெண்களைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி ஓஷாவா நபர்!

24

இரண்டு இளம் பெண்களைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய ஓஷாவா நபருக்கு இந்த மாத இறுதியில் இறுதி விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் முன்னெடுக்க வேண்டிய இறுதி விசாரணையானது கொரோனா மூன்றாவது அலை காரணமாக மாற்றப்பட்டு, தற்போது மே 27-28 நாட்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நேரடியாக அந்த நபருக்கு தீர்ப்பு அளிக்க இருப்பதால், உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஒன்ராறியோ நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் தீர்ப்பளிக்கப்படும் நாளில், நீதிமன்ற அறைக்குள் குடும்ப உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் ஊடக உறுப்பினர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் எனவும் நீதிபதி Di Luca தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஆதம் ஸ்ட்ராங் குற்றவாளியென கடந்த மாதம் விசாரணை அதிகாரிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

18 வயதான Rori Hache மற்றும் 19 வயதான Kandis Fitzpatrick ஆகியவர்களே ஆதம் ஸ்ட்ராங் என்பவரால் கொடூரமாக கொல்லப்பட்டவர்கள்.

இதில் Hache 2017ல் மாயமானார், Fitzpatrick 2008ல் இருந்தே குடும்பத்தாரால் தேடப்பட்டு வந்துள்ளார். Hache மிக கொடூரமாக சீரழிக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டுள்ளதும், அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

2017 ஆகஸ்டு 30ல் Hache மாயமான பின்னர் ஒரு வாரம் கடந்த நிலையில், ஓஷாவா துறைமுகத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரது தலை மற்றும் பிற உடல் பாகங்கள் பல மாதங்களுக்குப் பிறகு ஸ்ட்ராங்கின் படுக்கையறையில் ஒரு பிரீசருக்குள் இருந்து மீட்கப்பட்டது.

ஆதம் ஸ்ட்ராங் குடியிருந்த கட்டிடத்தின் அடித்தள குடியிருப்பில் அடைபட்ட வடிகால் ஒன்றில் மனித மாமிசம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, அவர் மீது சந்தேகம் எழுந்தது.

இதேப்போன்று Fitzpatrick விவகாரத்திலும், நீதிமன்றத்திற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கில் ஆதம் ஸ்ட்ராங் கொலை செய்துள்ளதாக நிரூபணமான நிலையில் அவருக்கு 25 ஆண்டுகள் பிணை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது