யாழில் உச்சம் தொடும் கொரோனா தொற்று எண்ணிக்கை – பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

0

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடம் கூடத்தில் 350 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

மேலும் அவர்களில் 7 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.அத்தோடு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

மேலும் அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் எனவும், ஏனைய நால்வரும் யாழ்ப்பாணம் காவல்நிலையத்தின் உத்தியோகத்தர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்ட கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.