டிப்பர் – பட்டாவாகனம் மோதி ஒருவர் பலி!

0

டிப்பர் – பட்டா வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை பொலிஸ் சாவடி பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பகுதியிலிருந்து குறித்த பகுதியால் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வண்டியுடன் புத்தளத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி தேங்காய்கள் ஏற்றி வந்த பட்டா வாகனம் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் டிப்பரில் சென்ற மீராவோடை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய மீரா முகைதீன் மன்சூர் எனும் டிப்பர் உதவியாளர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஓட்டமாவடியைச் சேர்ந்த நாகூர் முகம்மது ஹனீபா (51வயது) எனும் டிப்பர் சாரதி படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பட்டா வாகன சாரதியை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.