வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது!

15

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

புளியங்குளம் விசேட அதிரடிப் படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்திலேயே வவுனியா – பாலமோட்டை வயல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இளைஞரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து சட்டவிரோத துப்பாக்கி (இடியன்துப்பாக்கி) கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்த விசேட அதிரடிப் படையினர் அவரை ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்