பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் நடைபெற இருக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சபம்!

12

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இவ்வாறு இடம்பெறும் இந்த ஆண்டிற்கான உற்சவத்தில் கொவிட் 19

வைரஸ் பரவல் காரணமாக இலங்கை – இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பங்குத் தந்தையர் பூசை வழிபாட்டில் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு இடம்பெறும் பூசைக்கு தேவையான பிற ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் படகு ஒன்று நேற்றுக் காலையில் கச்சதீவை நோக்கிப் பயணித்துள்ளது.

இவ்வாறு பயணித்த படகு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்தே பயணித்துள்ளது.

இதேவேளை இம்முறை இடம்பெற வேண்டிய கச்சதீவு உற்சவத்தில் இம்முறை பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்டச் செயலகத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.