இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை!

2

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காணப்படுவதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.

ஊடகங்களுடன் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரத்த தான திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.