Thursday, April 25, 2024
Homeஇந்திய செய்திகள்ஸ்விக்கி யின் அதிகம் ஆடர் செய்யப்பட்ட உணவு பொருட்களின் பட்டியல் …டாப் இடங்களை பிடித்த மசால்...

ஸ்விக்கி யின் அதிகம் ஆடர் செய்யப்பட்ட உணவு பொருட்களின் பட்டியல் …டாப் இடங்களை பிடித்த மசால் தோசை பிரியாணி !

டெல்லி: பிரபல உணவு டெலிவரி செயலியான ஸ்விக்கி இந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட டாப் 10 உணவுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது

இந்த டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே ஆன்லைன்தான். டேட்டிங் முதல் ஷாப்பிங் வரை இப்போது எல்லாமே செயலிகள் வாயிலாகவே நடைபெறுகிறது. உணவு சாப்பிடும் முறை தான் இந்த டிஜிட்டல் யுகத்தில் பெரிதும் மாறியுள்ளது.

முன்பெல்லாம் நேரடியாக உணவகம் சென்றே ஹோட்டல் உணவுகளை நாம் ஒரு பிடி பிடிப்போம். பார்செல் என்றாலும் கூட நாமே கடைகளுக்குச் சென்று தான் வாங்கி வருவோம். ஆனால், இப்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது.

உணவு ஆர்டர் ஸ்விக்கி, ஜெமெட்டோ உள்ளிட்ட செயலிகள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்வது தான் இப்போது டிரெண்டிங். இந்த செயலிகளை பயன்படுத்துவதும் ரொம்பவே ஈஸி.. உணவைப் பெற்றுக் கொண்ட பிறகு கூட நாம் பணத்தைச் செலுத்தினால் போதும் என்பதால் வயதானவர்களும் இதன் பக்கம் வருகிறார்கள். மழையோ வெயிலோ வீட்டு வாசலிலேயே உணவைப் பெற முடியும் என்பதே இதில் இருக்கும் சிறப்பு. இதனால் ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலம் உணவுகளை ஆர்டர் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

டாப் இடங்கள்

இதற்கிடையே இந்தாண்டு இந்தியர்கள் அதிகம் விரும்பி ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்விக்கி வருடாந்திர டிரெண்டிங் உணவுப் பட்டியலை அந்நிறுவனம் 7ஆவது முறையாக வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்யும் உணவுப் பட்டியலைப் பார்க்கும் போது இந்தாண்டும் கூட இந்தியர்களுக்குப் பிரியாணி மீதான மோகம் குறையவில்லை போல. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் பிரியாணி, மசால் தோசைகள் தான் தான் டாப் இடங்களில் உள்ளது

பிரியாணி

7ஆவது ஆண்டாக இந்த முறையும் ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாகப் பிரியாணி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது ஸ்விக்கி தளத்தில் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது. அதாவது ஒரு நொடிக்கு 2.28 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகிறது. இதில் இருந்தே இந்தியர்களுக்குப் பிரியாணி மீதான மோகம் குறையவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இடையில் பிரியாணியால் ஆண்மைக் குறைவு ஏற்படுவதாக இணையத்தில் தகவல் பரவிய நிலையில், அந்த பொய்யான தகவலையெல்லாம் அடித்து நொறுக்கிவிட்டு இருக்கிறது பிரியாணி விற்பனை.

மசால் தோசை

அசைவம் உண்பவர்களுக்குப் பிரியாணி என்றால் சைவம் உண்பவர்களுக்கு மசால் தோசை இருக்கிறது. இந்தாண்டும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியலில் மசால் தோசை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் பட்டர் மசாலா, பட்டர் நான், வெஜ் பிரைட் ரைஸ், வெஜ் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவை இடம் பெற்றுள்ளது. வெளிநாட்டு உணவுகளில் இத்தாலிய பாஸ்தா, பீஸ்ஸா, மெக்சிகன் பவுல், காரமான ராமன் மற்றும் சுஷி உள்ளிட்டவை டாப் இடங்களில் உள்ளன.

ஸ்நாக்ஸ் அதேபோல அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் பட்டியலையும் ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. அதில் சமோசா, பாப்கார்ன், பாவ் பாஜி, பிரஞ்சு ப்ரைஸ், கார்லிக் பிரெட்ஸ்டிக்ஸ், ஹாட் விங்ஸ், டகோ, கிளாசிக் ஸ்டஃப்டு கார்லிக் பிரெட், மிங்கிள்ஸ் பக்கெட் ஆகியவை டாப் 10 இடங்களில் உள்ளன. குலாப் ஜாமூன், ராஸ்மலை, சோக்கோ லாவா கேக், ரஸ்குல்லா, சாகோசிப்ஸ் ஐஸ்கிரீம், அல்போன்சோ மேங்கோ ஐஸ்கிரீம், கஜு கட்லி, டெண்டர் கோகனட் ஐஸ்கிரீம், சாக்லேட், ஹாட் சாக்லேட் ஃபட்ஜ் ஆகியவை டாப் 10 ஸ்வீட்கள் பட்டியலில் உள்ளன.

இன்ஸ்டாமார்ட் டாப் 5 உணவு வகைகளைப் பொறுத்தவரை.. வட இந்திய உணவுகள் முதல் இடத்தில் உள்ளன. சீன உணவுகள் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், பிரியாணி, இனிப்புகள்/ஐஸ்கிரீம், அமெரிக்கன், தென்னிந்திய உணவுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.ஸ்விக்கி இப்போது புதிதாக இன்ஸ்டாமார்ட் சேவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் உணவைத் தாண்டி பல விஷயங்களை நம்மால் பெற முடியும். அதில் முதல் இடத்தில் டீ உள்ள நிலையில், தண்ணீர், ரொட்டி, காய்கறிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments