Friday, April 19, 2024
Homeஇலங்கை செய்திகள்வெளிநாட்டில் 343 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சித் தகவல்!

வெளிநாட்டில் 343 இலங்கை தொழிலாளர்கள் உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சித் தகவல்!

2014 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் 343 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக (SLBFE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புக்கான காரணம் இயற்கை மரணம், தற்கொலை, கொலை, சாலை விபத்து, பிற விபத்துகள், கொரோனா இறப்புகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத மரணங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது.

இதன்படி, 207 இயற்கை மரணங்கள், 30 தற்கொலை மரணங்கள், 6 உள்நாட்டு கொலைகள், 50 வீதி விபத்துக்கள், 35 இதர விபத்துக்கள், 14 கொரோனா வைரஸ் இறப்புகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

2015 ஆம் ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, 29 இயற்கை மரணங்கள், 4 தற்கொலைகள், ஒரு கொலை, 12 சாலை விபத்துகள் மற்றும் 6 உறுதிப்படுத்தப்படாத இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் 2020 இல் மிகக் குறைவான இறப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, 13 இயற்கை மரணங்கள், 2 தற்கொலை இறப்புகள், 3 உள்நாட்டு கொலைகள், 2 விபத்துக்கள் மற்றும் ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இந்த வருடம் ஒக்டோபர் 31ஆம் திகதி வரையில் 37 மரணங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments