Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்வெளிநாட்டில் இருந்து வரும் குடும்பங்களைக் குறி வைக்கும் கும்பல்! யாழ்ப்பாணம் வந்தவர்களின் உடைமைகள் வாகனத்துடன் மாயம்!!

வெளிநாட்டில் இருந்து வரும் குடும்பங்களைக் குறி வைக்கும் கும்பல்! யாழ்ப்பாணம் வந்தவர்களின் உடைமைகள் வாகனத்துடன் மாயம்!!

கொரோனாவுக்குப் பின் தற்போது இலங்கையை நோக்கிச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் அரச தரப்பால் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது.

ஆனால் அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு என்பது அல்லது அவர்களின் உடமைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது.

தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினையைத் தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தாக்கம், கொள்ளைச் சம்பவங்களை அதிகரித்திருக்கின்றது எனலாம்.

அந்த வகையில், கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்காக விமான நிலையத்தில் வந்திறங்கியிருக்கிறது ஒரு குடும்பம்.

யாழ்ப்பாணம் செல்வதற்காக விமான நிலையத்தில் தரித்து நின்ற ஹயஸ் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில் பயணத்தின் இடைநடுவில் உணவு உண்பதற்காக ஒரு கடையில் நிறுத்தப்பட்டது வாகனம். அனைவரும் கடைக்குள் உணவு உண்டு விட்டு வெளியில் வந்து பார்த்தபோது வாகனத்தைக் காணவில்லை.

குறித்த வாகனத்தின் சாரதி வாகனத்தில் இருந்த வெளிநாட்டுக் குடும்பத்தின் அத்தனை உடைமைகளுடனும் காணாமல் போயுள்ளார்.

நடு வீதியில் நிர்க்கதியாக நின்ற குடும்பம், பிறிதொரு வாகனத்தின் மூலம் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததாகத் தெரியவருகிறது.

இச் சம்பவம் தொடர்பில் கனடா வானொலி மற்றும் ஊடகங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது.

எனவே வெளிநாட்டிலிருந்து வரும் மக்கள் உங்களுக்குத் தெரிந்த அல்லது தெரிந்தவர்களின் மூலம் ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி பயணத்தை மேற்கொள்வது உங்களினதும், உங்கள் உடைமைகளினதும் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருக்கும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments