Friday, April 19, 2024
Homeவாழ்வியல்வீட்டு வேலைகளை செய்வதில் உங்கள் பார்ட்னர் பிரச்சனை செய்கிறாரா..? இந்த 5 டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்..!

வீட்டு வேலைகளை செய்வதில் உங்கள் பார்ட்னர் பிரச்சனை செய்கிறாரா..? இந்த 5 டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்..!

குடும்பம் என்பது கணவன் – மனைவி என இருவரும் உற்சாகமாக மற்றும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சிகரமாக செல்லும். பெரும்பாலும் கணவர்கள் வெளியில் வேலைக்கு செல்வதால், வீட்டிலிருக்கும் பெண்கள் நாள் முழுவதும் அதிக வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது.

வீட்டில் அதிக வேலைப்பளு காரணமாக சிரமத்தை சந்திக்கும் பெண்கள் தங்கள் கணவர் வீட்டிலிருக்கும் நேரத்திலாவது சில உதவிகளை செய்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள். இதனால் கணவரிடம் சில உதவிகளை அல்லது வேலைகளை செய்ய சொல்லும் போது கணவர்கள் சோம்பல் அல்லது வேறு காரணங்களால் அதை செய்ய மறுக்கும் போது உறவில் சிக்கல் எழுகிறது.

இந்த பிரச்சனை உங்கள் வீட்டிலும் இருந்தால் உங்கள் கணவரின் சோம்பேறித்தனத்தை குறைக்க அல்லது அவர்களை சுறுசுறுப்பாக வைக்க ஒரு மனைவியாக நீங்கள் என்ன செய்யலாம் என்பதற்கான டிப்ஸ்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள்:

கம்யூனிகேஷன் மற்றும் நேர்மை உள்ளிட்டவை எந்த உறவையும் நெருக்கமாக வைத்திருக்க உதவுகின்றன. உங்கள் பார்ட்னர் வீட்டு வேலைகளை செய்வதில் அல்லது சமாளிப்பதில் போதுமான பங்களிப்பை வழங்கவில்லை என நீங்கள் நினைத்தால் அது சார்ந்த உங்கள் கவலைகளை வெளிப்படுத்துங்கள். அலுவலகம் சென்று வந்தாலும் கூட சிறுசிறு வேலைகளை செய்வதில் அவர் உங்களுக்கு உதவி செய்யாமல் இருப்பது உங்களை எப்படி பாதிக்கிறது என்பதை பொறுமையாக எடுத்து கூறுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக உதவி செய்யாமல் இருக்கும் பழக்கத்தை மாற்றி கொள்ள சொல்லுங்கள்.

முயற்சி செய்யும் போது பாராட்டுங்கள்:

முக்கியமான பில்களை செலுத்துவது, வீட்டிற்கு தேவையான பொருட்களில் ரிப்பேர் ஏற்பட்டால் அதனை சரி செய்வது போன்ற பல முக்கிய வேலைகளை முடிக்க உங்கள் பார்ட்னர் உதவி செய்யும் நேரங்கள் இருக்கும். அந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் செய்யும் உதவிகள் மற்றும் வேலைகளுக்காக பாராட்டு தெரிவியுங்கள் மற்றும் நன்றி கூறுங்கள். இது போல உதவி கேட்கும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீங்கள் கேட்பவற்றை செய்ய அவர்களை ஊக்குவிக்க முயற்சி செய்யுங்கள்.

மிரட்டாதீர்கள்…

உங்கள் பொறுமையை பார்ட்னர் எவ்வளவு சோதித்தாலும் சரி ஒரு வேலையை செய்ய சொல்லி மிரட்டுவது குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை செய்து முடிக்க சொல்லி கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவை வேண்டாம். அவசரமாக முடிக்க தேவையில்லாத வேலைகளை அவர்கள் வழியில் செய்ய அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் மற்றும் நேரம் கொடுங்கள். இப்படி செய்வது நீங்கள் காத்திருக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் மற்றும் அந்த வேலையே அவர்கள் உறுதியாக செய்வார்கள். தொந்தரவு செய்யாமல், மிரட்டாமல் அவ்வப்போது ரிமைண்ட் செய்தால் மட்டும் போதும். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டு அவர்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

ஒருவருக்கொருவர் புரிதல் வேண்டும்:

நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உங்களது குறிப்பிட்ட பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வது இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சினைகளுக்கு ஆக்கப்பூர்வ தீர்வுகளை கண்டறிய உதவுகிறது. முதலில் உங்கள் பார்ட்னரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பின் தினசரி அல்லது வீட்டுவேலைகளில் அவர்கள் உதவி செய்ய தூண்டும் சில நடவடிக்கைகளை எடுப்பது சரியான முறையாக இருக்கும்.

வீட்டு பொறுப்புகளை பிரித்து கொள்ளுங்கள்:

உங்கள் பார்ட்னருக்கு சில வகை வீட்டு வேலைகளை செய்வதில் பெரிதாக ஆர்வம், விருப்பம் இல்லாததால் அவர்கள் அவற்றை தவிர்க்கலாம். எனவே உங்கள் பார்ட்னருக்கு விருப்பமான அல்லது ஆர்வமான வேலைகள் என்னவென்று கேட்டு அதற்கேற்ற வேலைகளை எல்லாம் நாம் செய்கிறேன், உங்களுக்கு பிடித்த இந்த வேலைகளை செய்து எனக்கு உதவுங்கள் என இருவருக்கும் சம்மதமான ஒரு வீட்டு பொறுப்பு பட்டியலை ரெடி செய்யலாம். வேலைகளில் உங்கள் இருவரின் விருப்பு வெறுப்புகள், பலம், நேரம் மற்றும் செயல்திறனை கருத்தில் கொண்டு பணிகளை பிரித்து கொள்வது இதற்கு நல்ல தீர்வாக இருக்கலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments