Tuesday, March 19, 2024
Homeஉலக செய்திகள்வீட்டு வேலைகளுக்காக மனைவிக்கு 218,300 டொலர்கள் இழப்பீடு; விவாகரத்து செய்த கணவருக்கு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவு.

வீட்டு வேலைகளுக்காக மனைவிக்கு 218,300 டொலர்கள் இழப்பீடு; விவாகரத்து செய்த கணவருக்கு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவு.

விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு வீட்டு வேலை செய்ததற்காக 218,300 டொலர்கள் இழப்பீடு
வழங்க வேண்டும் என கணவனுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

25 ஆண்டுகளாக ஒன்றாக இருந்த போது வீட்டு வேலை செய்ததற்காக குறைந்தபட்ச ஊதியம்
நிர்ணயித்து, 218,300 டொலர்களை ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், 25 வருடங்களின் பின்னர் கணவர் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரியுள்ளார்.

வீட்டு வேலைகள் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும் இதனால்
தனக்கு விவாகரத்துடன் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மனைவி நீதிமன்றில்
தெரிவித்துள்ளார்.

அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்கு கணவர் 218,300 டொலர்கள்
இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சுத்தம் செய்வது, கழிவறை கழுவுவது, சமையலறையை பேணுவது என வீட்டை பராமரிக்கும்
வேலைகளை ஆணும் பெண்ணும் சரிசமமாக பங்கிட்டு செய்ய வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளதுடன், வீட்டில் வேலைகளை தனியாக செய்பவருக்கு ஊதியம் வழங்கப்பட
வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்ணின் கணவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் மாதாந்த பராமரிப்புத் தொகையை
வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments