Wednesday, April 24, 2024
Homeஇந்திய செய்திகள்விண்டேஜ் பொருள்கள் விற்பனைக்கு!.. வணிகத்தில் கலக்கி வரும் திருச்சி வியாபாரி.

விண்டேஜ் பொருள்கள் விற்பனைக்கு!.. வணிகத்தில் கலக்கி வரும் திருச்சி வியாபாரி.

பாரம்பரியமான பழங்கால பொருட்களுக்கு எப்போதுமே மவுசு குறைவதில்லை. பழமையை விரும்புவோர் இந்த பொருட்களை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்கி வீடுகளை அலங்கரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறு திருச்சியில் தென்னூர் பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டுள்ள பழமையான பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரளாவை சேர்ந்த வியாபாரி ஒருவர் இந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.ஒவ்வொரு நொடிக்கு இருபுறம் அசையும் பழமையாக கடிகாரங்கள், தெய்வ சிலைகள், தொலைநோக்கி, நாணயங்கள், விளக்குகள், கிராம்போன்கள் என இவரிடன்ஏராளமான வின்டேஜ் பொருட்கள் குறிப்பாக அரண்மனையில் இருந்த பொருட்கள் உள்ளன.500 ரூபாய் தொடங்கி 7500 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருக்கிறது. அதில் அனைவரையும்அதிகம் கவர்ந்தது கிராமபோன் தான்.ஒலியைப் பதிவு செய்த தட்டுகளை பயன்படுத்தி அதே ஒலியை- தட்டுகள் மூலம் மீண்டும்கேட்க பயன்படும் கருவியே ‘கிராமபோன்’ என அழைக்கப்படுகிறது.

இக்கருவி அவர் எழுப்பும் ஒலியை மின் அலைகளாக மாற்றும். அந்த மின் அலையின் ஒலிக்கேற்ப ஒலிப்பதிவுக் கருவியில் இணைக்கப்பட்டுள்ள ஊசி அசைந்து, மெழுகுத் தட்டின் மீது மெல்லிய கோடுகளாகப் பதியும்.இந்த மெழுகு தட்டு உறையும் தன்மை கொண்டது. எனவே, அரக்கு, கார்பன் போன்றவைகளைக் கொண்டு கெட்டித் தட்டுளாக மெழுகில் இருந்து பிரதி எடுத்து கொள்கின்றனர். ஒரு மெழுகு தட்டை கொண்டு வேண்டிய அளவு பிரதிகள் எடுக்க முடியும்.இவ்வாறு ஒலிப்பதிவு செய்யப்பட்ட தட்டிலிருந்து ஒலியை வெளிப்படுத்த தனிக் கருவி உண்டு. அதற்குக் ‘கிராமபோன் பெட்டி’ என்று பெயர். அப்பெட்டியில் வட்ட வடிவிலான ஒலிப்பதிவு தட்டை வைக்க ஒரு மேடைப் பகுதி உண்டு.

அந்தப் பெட்டியின் ஒரு மூலையில் கூர்மையான சிறு ஊசியைப் பொருத்தும் சிறு கருவி உண்டு. அதில் ஊசியைப் பொருத்தி, சுழலும் ஒலித்தட்டின் ஓரத்திலிருந்து தொடங்கும் மெல்லிய கோட்டின்மீது வைத்தால், கோட்டின் மேடு பள்ளங்களுக்கேற்ப பதிவான ஒலி முழுமையாக வெளிப்படும் வகையில் ஊசியில் அதிர்வேற்படும்.

ஊசியுடன் இணைக்கப்பட்டுள்ள இடைத்திரை ஊசியின் அதிர்வுக்கேற்ப அதிர்ந்து ஒலி அலைகளை வெளிப்படுத்தும். அவ்வொலி அலைகளையே பேச்சாகவும் பாட்டாகவும் மீண்டும் கேட்டு மகிழ்கிறோம்.காலமாற்றத்தினால்கேசட், சி.டி., டி,வி,டி பென் டிரைவ் மேலும் தற்போது கிளவுட் ஸ்டோரேஜ் வரை வந்துவிட்டோம். ஆனலும்கிராமபோன்களின்மூலம் பாடல்கள் கேட்பது ஒரு தனி சுகம் என்கிறார் இதை வாங்குவதற்காக வந்த பழமை விரும்பி ஒருவர். மக்கள் மனதில் பழமை என்பதற்கு ஒரு தனியிடம் உண்டு என்றால் அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments