Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்வடக்கில் முதல் கணனி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கிகள் யாழில் ஆரம்பிப்பு!

வடக்கில் முதல் கணனி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கிகள் யாழில் ஆரம்பிப்பு!

வட மாகாணத்தில் முதன் முதலாக கணினி மயப்படுத்தப்பட்ட சமுர்த்தி வங்கிகளுக்கான தரவு தளம் நேற்றைதினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வை இலங்கை சமுர்த்திப் பணிப்பாளர் நாயகம் திலக சிறி ஆரம்பித்து வைத்தார்.

யாழ் மாவட்டத்தில் உள்ள கோப்பாய், ஆவரங்கால் மற்றும் உடுப்பிட்டி ஆகிய சமுர்த்தி வங்கிகளே இவ்வாறு கணினி மயப்படுத்தப்பட்டுள்ளது.

பதிவேட்டு புத்தக நடைமுறையிலிருந்து டிஜிட்டல் நடைமுறைக்கு மாற்றப்பட்டுள்ள குறித்த வங்கிகள் ஏற்கனவே பதிவேட்டில் பின்பற்றிய ஆறு நடைமுறைகளை இனிமேல் பேன வேண்டிய தேவை இதன் மூலம் ஏற்படாது.

நாளாந்த கொடுக்கல் வாங்கல் பதிவு, சேமிப்பு கணக்கில் ஆல் சார் பெயரீடுகள், ஆல் சார் வைப்புப் பெயரீடுகள், கணக்கு வரவு செலவு, முதலீட்டு வைப்பாளர் பெயரீடு மற்றும் கடன் கட்டுப்பாடு பெயரீடு ஆகியன கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் 20 சமுர்த்தி வங்கிகள் கணினி மயப்படுத்தப்பட உள்ள நிலையில் குறைத்த வங்கிகளின் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை ஆராய்ந்து பன்னிரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அவற்றுக்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.

என் நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கொழும்பு சமுத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம், பிரதிப் பதிப்பாளர் நாயகம், மேலதிக செயலாளர் மற்றும் யாழ் மாவட்ட சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments