Saturday, April 20, 2024
Homeஇலங்கை செய்திகள்வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவைகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்

வசதி குறைந்த ஆசிரியர்களுக்கு சேலை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சேலை அணிந்து பாடசாலைக்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புடவை வாங்க முடியாததால் வேறு ஆடைகளை அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

அத்தகைய வசதி குறைந்த ஆசிரியர்களுக்கு இலவச சேலை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில ஆசிரியர்கள் தினமும் சேலை அணிவதால் ஏற்படும் செலவைத் தவிர்க்க வேறு ஆடைகளையே விரும்புகின்றனர் என்றார்.

வசதி குறைந்த ஆசிரியர்களுக்கு புடவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments