Thursday, April 25, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ்.வறுத்தலை விளானில் குளத்திலிருந்து மண்ணை அள்ளி விற்கும் வெளிநாட்டிலிருந்துவந்த வியாபாரி! பொறுப்புவாய்ந்தோர் மண்டையை சொறியும் பரிதாபநிலை..!

யாழ்.வறுத்தலை விளானில் குளத்திலிருந்து மண்ணை அள்ளி விற்கும் வெளிநாட்டிலிருந்துவந்த வியாபாரி! பொறுப்புவாய்ந்தோர் மண்டையை சொறியும் பரிதாபநிலை..!

யாழ்.வலிகாமம் வடக்கு வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் பாரிய மண் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பிள்ளையார் கோயில் குளத்தில் இருந்து தனியார் ஒருவர் குளத்தில் தாமரை வளர்க்கப் போவதாக தெரிவித்து சுமார் 200 லோட்டுக்கு அதிகமான மண்ணை அகழ்ந்து எடுத்துள்ளதுடன்,

அதனை வெளி இடங்களில் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குளத்தில் கால்நடைகள் நீர் அருந்து நிலையில் பாரிய குழிகள் தோண்டப்பட்டு மண் அகழ்வு இடம்பெறுவதால் கால்நடைகள் குளத்துக்குள் மூழ்கும் துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஊர் மக்கள் சிலர் குளத்தில் மண் அகழ்பவர்களை கேட்டதற்கு பிரதேச சபை தவிசாளர் தமக்கு அனுமதி தந்ததாக தெரிவித்தே மணல் ஏற்றிச் சென்றதாகத் மக்கள் தெரிவித்தனர்.

குளத்தில் இருந்து ஒரு கிழமைக்கு மேலாக மண் அகழப்பட்டு வருகின்றது. இத்தகைய சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் பிரதேசசபை செயலாளருக்குத் தெரியப்படுத்தியதோடு தெல்லிப்பழைப் பிரதேச செயலருக்கும் தெரியப்படுத்தினேன்.

சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றிய வாகனங்களை தொல்லிப்பளைப் பிரதேச செயலாளர் கைப்பற்றிய நிலையில் ஏற்றப்பட்ட பறித்த பின்பு வாகனங்களை அங்கிருந்து செல்வதற்க அனுமதித்தார்.

சட்ட நடவடிக்கைக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்காமல் எவ்வாறு செல்ல அனுமதித்தார் என கேள்வி எழுப்பினார்.

குளம் கமநல சேவைத் திணைக்களத்தின் கீழ் வருவதாகவும் மண் அகழ்வுக்கு தாம் அனுமதி வழங்கவும் இல்லை வழங்கவும் முடியாது என்றார்.

பிரதேசசபை அதற்கான அனுமதியை வழங்கவில்லை என தெரிவித்ததோடு மண் அகழ்வு தொடர்பில் பிரதே சபை உறுப்பினர் தமக்கு அறியத் தந்தார் என தெரிவித்தார்.

பகுதியில் மண் அகழ்வு தொடர்பாக கடந்த 18 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments