Friday, April 19, 2024
Homeயாழ்ப்பாணம்யாழ். சாவகச்சேரியில் உயிரை பணயம் வைக்கும் மக்கள்! அதிகாரிகள் அலட்சியம் !

யாழ். சாவகச்சேரியில் உயிரை பணயம் வைக்கும் மக்கள்! அதிகாரிகள் அலட்சியம் !

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இன்று (27-10-2022) காலை முதல் இப்போது வரை புகையிரத கடவை சமிக்ஞை விளக்குகளும் சமிக்ஞை ஒலியும் தொடர்ச்சியாக இயங்கிய வண்ணம் உள்ளன.

இதனால் புகையிரத வீதியை கடப்போர் உயரைப் பணயம் வைத்து மிகுந்த ஆபத்துக்கு மத்தியில் கடவையை கடக்கும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிட கடவை மற்றும் சங்கத்தானை, மீசாலை சந்தி ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் புகையிரத கடவை சமிக்ஞை விளக்கும் ஒலியும் இன்று காலை முதல் தற்போது வரை தொடர்ச்சியாக இயங்கியவாறு உள்ளன.

இதனால் மக்கள் அபாயகரமான கட்டத்தில் கடவையை கடக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகி உள்ளனர்.

ஏனெனில் தொடர்ச்சியாக புகையிரத கடவை சமிக்ஞை இயங்குவதால் மக்கள் புகையிரதம் வருகின்ற நேரத்திலும் அதனை சாதாரணமாக கடக்க முற்படுகின்ற பொழுது பாரிய விபத்துக்கள் ஏற்படுகின்ற அபாயம் காணப்படுகின்றது.

இது தொடர்பாக புகையிரத திணைகளத்தினர் இன்று முழுவதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வராதது மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments