Thursday, April 25, 2024
Homeயாழ்ப்பாணம்யாழில் 7 வருடங்களுக்குப் பின்னர் ,இன்று இடம்பெற்ற முக்கிய நிகழ்வு - மகிழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள்!

யாழில் 7 வருடங்களுக்குப் பின்னர் ,இன்று இடம்பெற்ற முக்கிய நிகழ்வு – மகிழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள்!

யாழ்ப்பாணத்தில் சுமார் 7 வருடங்களின் பின்னர் இன்று புத்தகக் கண்காட்சி நடைபெற்றுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் அச்சு வெளியீடுகள் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ஏ.பிரபாகரன் தெரிவித்தார்.

யாழ் மத்திய கல்லூரியில் இன்று ஆரம்பமான புத்தக விற்பனை கண்காட்சியில் கலந்து கொண்டு சமூக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்கள் நிறுவனம் மாணவர்கள், ஆசியர்கள் மற்றும் பிற கல்வியாளர்களுக்கான பதிப்புகளை வெளியிட்டு வருகிறது.

சுமார் 7 வருடங்களின் பின்னர் இன்று வடமாகாண யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இப்புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட கண்காட்சி சிறப்பாக நடந்து வருகிறது.

மாணவர்களின் சுயகற்றலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வடமாகாண கல்வி அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

வாசிப்புதான் நமது மூச்சு என்றார். மாணவர்கள் அதிகம் புத்தகங்களை படிக்க வேண்டும். அவர்கள் வீட்டிலிருந்து கற்க அதிக நேரம் செலவிட வேண்டும். மேலும் இந்த புத்தகங்கள் 20 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments