Friday, March 29, 2024
Homeஇலங்கை செய்திகள்யாழில் பாண் கூட சாப்பிட முடியவில்லை - அங்கயன் எம்.பி கவலை!

யாழில் பாண் கூட சாப்பிட முடியவில்லை – அங்கயன் எம்.பி கவலை!

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவிக்கையில்:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெரிதாக விடயங்கள் ஒன்றும் இல்லை.மக்கள் நிகழ் காலத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்காமல் ,எதிர் காலத்தை நோக்கி ,கொள்கை அற்ற வரவு செலவுத் திட்டமாக இது அமைந்துள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு பாண் சாப்பிடுவதற்கு மாதம் 36000 ரூபா தேவைப்படுகிறது.சாதாரண வாழ்க்கையை நடாத்துவதற்கு மாதாந்தம் 100000 ரூபா தேவைப்படுகிறது.சாதாரண கூலி வேலை செய்யும் தொழிலாளி எவ்வாறு வாழ்க்கையை நடாத்துவது.இந்த நிலையில் மாணவர்கள் பலர் பட்டினியில் வாழ்கின்றனர்.

ஒரு வீட்டில் காலை ஒருவர் சாப்பிட்டால் ,மற்றையவர் மாலை சாப்பிடுவார் இப்படி ஒரு அட்டவணையில் தான் மக்கள் வாழ்கின்றனர்.இதற்கு என்ன தீர்வு என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments